புத்தாண்டுத் தீர்மானங்கள்

பொதுவாக நிறையப் பேர் செய்வதும், பெரும்பாலும் யாரும் கடைப்பிடிக்க முடியாமல் கைவிடுவதுமாக ஒவ்வோர் ஆண்டும் நகைப்புக்கு இடமாவது, புத்தாண்டுத் தீர்மானங்கள். தீர்மானங்களைச் செயல்படுத்த முடியாமல் போவதற்கு முக்கியமான காரணம், குறிப்பிட்ட செயலைச் செய்வதற்கு நாம் ஆயத்தமாக இருக்கிறோமா, இல்லையா என்கிற தெளிவின்மையே. ஆரம்பித்துவிடலாம்; பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிற மனநிலையிலேயே பல தீர்மானங்களைச் செயல்படுத்தத் தொடங்குவோம். துரதிருஷ்டவசமாக அது நடக்காது. முன்பெல்லாம் குறைந்தது பத்து புத்தாண்டுத் தீர்மானங்களாவது வைத்திருப்பேன். அவற்றுள் ஒன்றிரண்டைக் கூட ஆண்டு முடிவதற்குள் நிறைவேற்ற முடியாது. … Continue reading புத்தாண்டுத் தீர்மானங்கள்